Saturday 10 December 2011

நோவாவின் பேழை


கிறித்துவர்களின் புனித நூலான விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்தில் நோவாவினுடைய கதை வருகிறது. உலகில் பாவங்கள் அதிகரித்து மனிதர்கள் தீய குணங்கள் உடையவர்களாக இருந்ததினால் இறைவன் இவ்வுலகை மீண்டும் புதுப்பிக்க எண்ணினார். எனவே, மனிதர்களில் நற்குணங்கள் கொண்டவரும் நீதிமானாகவும் திகழ்ந்த நோவவினை தேர்ந்தெடுத்து அவரிடம் உலக ஜீவராசிகள் அனைத்திலும் ஒரு ஜோடி விலங்கினங்களும் அவற்றுடன் நோவா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்காக பேழையை உருவாக்குமாறு கட்டளையிட்டார். நோவா பேழையை உருவாக்கியவுடன் தான் பூமிக்கு பெருவெள்ளத்தை அனுப்புவதாகவும் அதில் உலகில் உள்ள அனைத்தும் அழிக்கப்படும் நீயும், உன் குடும்பத்தாரும், எஞ்சிய பேழையிலிருக்கும் உயிரினங்கள் மட்டுமே ஜீவிதிருபீர்கள். வெள்ளம் வடிந்தவுடன் புதுவுலகில் நீங்கள் மேன்மையான வாழ்வை வாழுங்கள் என கட்டளையிட்டார். அதன்படி நோவாவும் பேழையை செய்து முடிக்க பெருவெள்ளம் பூமியை ஆட்க்கொண்டது. அனைத்து உயிரினங்களும் மாண்டன பேழையில் எஞ்சியிருந்தவர்களை தவிர. விவிலியத்தின் கூற்றுப்படி வெள்ளம் வடிந்து நோவாவின் பேழை அரராத் என்னும் மலையின் கீழ் கரை ஒதுங்கியதாக உள்ளது. உலகிலுள்ள அனைத்து தொன்மங்களிலும் இதுப்போன்ற கதைகள் ஏராளம் உள்ளன. முகமதியர்களின் தொன்மமான குரான் இவரை நுவா இஸ்லாம் என்றழைக்கிறது. குரானிலும் அரராத் மலையினை அல்ஜூடி அன்று குறிப்பிட்டு அதனை 'பேழையின் உறைவிடம்' என்று கூறுகிறது.

இதனை ஆதாரமாகக்கொண்டு நோவாவின் பேழைக்கான தேடுதலை தொடங்கிய நேஷனல் ஜியோகிராபிக் தொலைகாட்சி குழுமத்தினர் 2009ஆம் அக்டோபர் மாதம் நோவாவின் பேழையை கண்டுப்பிடித்துள்ளனர். அவ்விடத்தில் செய்யப்பட்ட அனைத்து சோதனைகளும் அது நோவாவின் பேழைதான் என்று நிரூபிக்க போதுமானவையாக உள்ளதாக அவர்கள் தெரிவிகின்றனர். நோவாவின் பேழைக்கான தேடுதலின் கண்ணொளி கீழே.  


மேலும் அறிய

விவிலியத்திலும் குரானிலும் மட்டுமல்ல கிரேக்க, இந்து புராணங்களிலும் இவ்வாறான கதைகள் உள்ளன. இந்துக்கள் இவ்வாறாக ஏற்ப்பட்ட பெருவெள்ளத்தினை பிரளையம் என்றும் ஊழிக்காலம் என்றும் அழைக்கிறது. பிரதோஷங்கள் ஏழு வகைப்படும் அவற்றில் ஏழாவதான பிரளையக்கால பிரதோஷத்தினை யாரும் தரிசிக்க முடியாது அன்று இறைவன் ஊழித்தாண்டவம் ஆடுவார் என்று இந்து சமயத்தினரால் நம்பப்படுகிறது. எது எப்படியோ எந்தவொரு தொன்மமும் மனிதனுக்கு நேரிடையாக செய்திகளை வழங்குவதில்லை நாம் தான் அவற்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.


No comments:

Post a Comment